அருள்மிகு நீர்வேலி அரசகேசரிப் பிள்ளையார் ஆலயத்தில் வருடாந்த மகோற்சவத்தை முன்னிட்டு கொடியேற்றத் திருவிழா தொடங்கி மகோற்சவம் முடியும் வரை தொடர் சொற்பொழிவு நடைபெற்றுவருகிறது. தினமும் சொற்பொழிவு முடிவில் மாணவர்களிடம் வினாக்கள் கேட்கப்பட்டு பரிசில்கள் வழங்கப்பட்டு வருகின்றன, இரண்டாம் நாள் இரவு திருவிழாவின் போது சிவத்தமிழ் சொல்லழகர் திரு. ச. லலீசன் (Laleesan Laleesan) அவர்களின் சொற்பொழிவு நடைபெற்றது. பரிசில்களை சிவஸ்ரீ. சாம்பசதாசிவ சோமதேவக் குருக்கள் வழங்கி சிறப்பித்தார்.
தினமும் பிற்பகல் 6.00 – 7.00 வரை இந்நிகழ்வு இடம்பெறவுள்ளது. மாணவர்களை இந்நிகழ்வில் கலந்து கொண்டு பயன்பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்
மூன்றாம் நாள் சொற்பொழிவு படங்களை காண Click here