1905ஆம் ஆண்டில் சுவாமி ஞானப்பிரகாசரால் சிறிய ஓலைக்கொட்டிலில் நிறுவப்பட்ட பாடசாலை. நீர்வேலியில் பரலோகமாதா தேவாலயமும் இப்பாடசாலையும் பலத்த சவால்களுக்கு முகங்கொடுத்து நிறுவப்பட்டன.
சிறிய ஓலைக்கொட்டிலில் ஆரம்பிக்கப்பட்ட இப் பாடசாலை இன்று மாடிக்கட்டிடங்கள் கணினிக்கூடம், அதிபர் அலுவலகம் நூல் நிலையம், சிறிய விளையாட்டு மைதானம், சமையற் கூடம் ஆகிய வளங்களுடன் காணப்படுகிறது.
சுவாமி ஞானப்பிரகாசரின் வழிப்படுத்தலின் கீழ் எஸ். கபிரியேற்பிள்ளை உபதேசியார் இப் பாடசாலையை ஆரம்பித்தார். இதன் அதிபர்களாக பின்வருவோர் பணியாற்றினர்.
- அபிரகாம் யோசப்பு (கதிரவேலு உபாத்தியாயர், நீர்வேலி)
- N. பிலிப்பு (வசாவிளான்)
- N. அப்புத்துரை (வசாவிளான்)
- N. மதியாம்பிள்ளை (கரந்தன்)
- க. பிலிப்பு (வசாவிளான்)
- N. சிறிகௌதம் (அச்சுவேலி)
- சொர்ணம் அந்தோனிப்பிள்ளை (அழகம்மா – நீர்வேலி )
- பண்டிதர் செ. துரைசிங்கம் (நீர்வேலி)
- மு. வைத்தியலிங்கம் (கோப்பாய்)
- த. மயில்வாகனம் (நீர்வேலி)
- பொ.த. இராசா (கோப்பாய்)
- க. அருமைத்துரை (நீர்வேலி மேற்கு)
- ச. வேலழகன் (இடைக்காடு)
தற்போது அதிபராக சி. தர்மரத்தினம் (நீர்வேலி) கடமையாற்றி வருகிறார். தரம் 1 முதல் 9 வரையான வகுப்புக்களை கொண்ட இப் பாடசாலையில் 260 (2012 இல்) மாணவர்களும் 17 ஆசிரியார்களும் (2012 இல்) மல்வி சாராப் பணியாளர்களும் சேவையாற்றி வருகின்றனர்.