நீர்வேலி அத்தியார் இந்துக் கல்லுரி

20160421_113152_Richtone(HDR)

வரலாறு

h
அத்தியார் அருணாசலம்

அத்தியார் அருணாசலம் அவர்கள் தான் கொள்வனவு செய்த இரண்டு பரப்புக்காணியில் அமைந்த வித்தியாசாலையை விஸ்தரிப்பதற்கு பொருளாதார ரீதியில் சவால்களை எதிர்கொண்டார். தனது சொத்ததுக்கள் யாவற்றையும் விற்றுப் பெற்ற பணத்தினை கொண்டு அயலில் உள்ள காணிகளையும் கொள்வனவு செய்து பாரிய மண்டபங்களையும், அலுவலகங்கம் மற்றும் வளங்களையும் இயலக்கூடிய வகையில் அமைத்துக்கொண்டார்.

11.02.1920இல் ஸ்தாபிதம் செய்யப்பட்டதாக கொள்ளப்படும் இக்கல்லூரிஆரம்பத்தில் அத்தியார் இந்து தமிழ் பாடசாலை, அத்தியார் இந்து ஆங்கில
பாடசாலை எனும் இரு வேறு நிர்வாகங்களை கொண்டிருந்தது.

அத்தியார் அருணாசலம் கொழும்பு கொமேர்சல் கம்பனியில் களஞ்சியப்பொறுப்பாளராக பதவிவகித்தவர் அவர் மீதிருந்த நன்மதிப்பின் காரணமாக அக்கம்பெனியின் பொறியியலாளரான சாள்ஸ் கௌரிஸ் ரீபன் பாடசாலையின் கட்டடத்தை திறந்து வைத்தார். (பிரதான வாயிலுக்கு அருகில் இன்று இருக்கும் தொன்மையான கட்டிடம்)

ஆங்கில பிரிவு சாமுவேல் குணரட்ணம் அருளானந்தம் அவர்களின் கீழும் தமிழ்ப்பிரிவு திரு. க. சண்முகம் அவர்களின் நிர்வாகத்தின் கீழும் செயற்பட்டன.

இவர்களைத் தொடர்ந்து கொக்குவிலைச் சேர்ந்த கந்தையா அவர்கள் ஆங்கிலப்பாடசாலைத் தலைமையையும் நீர்வேலி செல்லையா நடராசா அவர்கள் தமிழ் பாடசாலை தலைமையையும் ஏற்று நடத்தினர். 1954இல் ஏற்பட்ட அரச கொள்கைக்கு அமைவாக இரு பாடசாலைகளும் இணைக்கப்பட்டன. அத்தியார் இந்துக் கல்லூரி எனப் பெயர் சூட்டப்பட்டது.

ந்க்ஸ்பன்ஹ்ன்
கந்தையா அருணாசலம்

அதிபராக சேவைபுரிந்து வந்துள்ளார். அனைவரினதும் பணிகளுக்கு உறுதுணையாக
தான் இளைப்பாறும்வரை நீண்டகாலம் உபஅதிபராகவும் பதில் அதிபராகவும் பணி
யாற்றி வந்த கந்தையா அருணாசலம் (சிறுப்பிட்டி) அவர்களது சேவையும் பாராட்டப்படவேண்டியது. இவர் இக்கல்லூரியின் ஆங்கிலபாடத்துக்கு உறுதுணையாகவிருந்து தனது ஆசிரியப் பணியைஇங்கேயே ஆரம்பித்து இளைப்பாறும்வரை இக்கல்லூரியிலேயே சேவையாற்றிய பெருமைக்குரியவர். ஆங்கிலக்கல்விவளர்ச்சிக்கு உறுதுணையாகவிருந்து கட்டுப்பாடு, பண்பு
என்பன கட்டிக்காக்கப்பட்டதையும் ஆங்கிலப் பேச்சாற்றலில்
முறையான (Pronounction) உச்சரிப்பு பேணப்பட்டதையும் என்றும் மறக்கமுடியாது. இவரது உசாரானஏறுபோல் பீறுநடை இன்றும் அவரது மாணவர்களின் உள்ளங்களில் பசுமரத்தாணி போல் படிந்துள்ளமை பெருமைக்குரியதே.

ந்க்ஸ்பன்ஹ்ன்
இராமநாதன் குணநாதன்

காலம் உருண்டோடியது 22.03.2002 இல் திரு. இராமநாதன் குணநாதன் அவர்கள்
இக்கல்லூரிக்கு அதிபராகக் காலடி எடுத்து வைத்துள்ளமையைக் கல்லூரிச் சமூகம்
மகிழ்ச்சியோடு வரவேற்றது. அன்றிலிருந்து கல்லூரியும் வளர்ச்சிப் பாதையில்
காலடி எடுத்து வைக்க ஆரம்பித்ததென்றால் மிகையாகாது. தென்மராட்சி விடத்தற்பளையைத் தனது பிறந்த இடமாகக் கொண்டாலும், நீர்வேலியில் ஒரு கல்விக் குடும்பத்தைப் புகுந்த இடமாக்கிக் கொண்ட பண்பாளராகத் திகழ்கின்றார்.
தான் எடுத்த காரியத்தை வெற்றிகரமாக நிறைவேற்றும் உளப்பாங்கு, சிறந்த ஆளுமை, கடமையுணர்ச்சி, கண்ணியம், பொறுப்புணர்ச்சி எல்லாவற்றுக்கும் மேலாக சமூகத்தை நன்கு மதித்து அர்ப்பணிப்புடன் செயலாற்றும் திறமை என்பன
இவரிடம் மேலதிகமாகக் காணப்படும் நற்பண்புகளாகும். இவை கல்லூரியின் வளர்ச்சிக்கு ஊன்றுகோலாக அமைந்தன என்றால் மிகையாகாது.Screenshot (1)
புலம்பெயர்ந்து வெளிநாடுகளில் வாழும் பழைய மாணவர்கள், நலன்விரும்பிகளை கல்லூரிமீது ஈர்க்கும் வகையில் ஆங்காங்கே நலன்புரிச்சங்கங்கள், பழைய மாணவர்
சங்கங்கள் என்பன அமைக்கப்பட்டு இக்கல்லூரியின் வளர்ச் சிக்கு மட்டுமன்றி கிராமத்தின் ஏனைய பாடசாலைகள், முன்பள்ளிகள் என்பனவற்றின் கல்வி வளர்ச்சியிலும் துரிதவளர்ச்சி காணப்பட்டு வருகின்றதென்றால் மிகையாகாது.
இவர்களது கிராமப்பற்று பாராட்டுக்குரியதே.

இக்கல்லூரிக்கும் கொழும்பில் பழைய மாணவர் சங்கம் அமைக்கப்பட்டு கல்வி வளர்ச்சிக்கு உதவுவதுபாராட்டுக்குரியது. அதன் தலைவராக இளைப்பாறிய அதிபர்
பூ.க. இராசரத்தினம் செயலாற்றி வருவது பெருமைக்குரியது.2002ஆம் ஆண்டு நூலகத்துக்கு நூல்கள் கொள்வனவு செய்வதற்கும், விளையாட்டு மைதானம்விஸ்தரிப்பதற்கு 16 பரப்புக்காணி கொள்வனவு செய்து வழங்கியதோடு வகுப்பறை
களுக்கு மறைப்புத் தட்டிகள், தளபாடங்கள் என்பன செய்வதற்கு ஐக்கிய இராச்சிய நீர்வேலி நலன்புரிச் சங்கம், சுவிஸ் பழைய மாணவர் சங்கம், கனடா, நீர்வேலி நலன்புரிச் சங்கம் என்பன உதவிக்கரம் நீட்டியமையை நீர்வேலி மக்கள்
என்றும் மறக்க மாட்டார்கள்.

மேலும் நீர்வேலி நலன்புரிச் சங்கம் கனடா அமைப்பு சிறுவர் பூங்கா நிர்மாணிப்பு, உபகரணங்கள் வழங்கல் முதலியன செய்துள்ளமை பாராட்டப்படவேண்டியதே.
லண்டன் பழைய மாணவர் சங்கம் காண்டீபன் என்பவர் தொலைபேசி இணைப்புச் செய்து தந்தமைபாராட்டப்பட வேண்டியதே.
2004ம் ஆண்டு சுவிஸ் நாட்டில் வாழும் பழைய மாணவன் மு. குகதாசன் ஒலிபெருக்கி சாதனம் ஒன்றையும் வழங்கியுள்ளமை மறக்க முடியாததாகும். வருடாவருடம் 5ம்
ஆண்டுப் புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்தவர்களுக்கும், பல்கலைக்கழகத்துக்குத் தெரிவானவர்களுக்கும் ஊக்குவிப்புப் பரிசில்கள் வழங்கிவருவது பாராட்டுக்குரியதே.

ஐக்கிய இராச்சியத்தில் வாழும் கல்லூரி நலன்விரும்பி பொன்னுத்துரை சிவசுப்பிரமணியம் (செல்வம்) பல்கலைக்கழ கத்துக்குத் தெரிவானவர்களுக்கு நிதிப்பரிசில் வழங்கி ஊக்குவித்து வருவது பாராட்டப்பட வேண்டியதே. மேலும், ஆங்கிலக் கல்வியின்முக்கியத்துவத்தைக் கருத்திற்கொண்டு, மேலதிகமாக ஆங்கில
ஆசிரியர் ஒருவருக்கு ஐக்கிய ராச்சிய பழையமாணவர் சங்கத்தினர் வேதனம் வழங்கி வருவது பாராட்டப்பட வேண்டியதே.
நீர்வேலி நலன்புரிச்சங்கம் U.K அமைப்பு குடிநீர் விநியோகத்தினையும், கட்டிட பராமரிப்பையும் செய்துள்ளமை
நினைவில் நீங்காத பாராட்டுக்குரியதாகும். சுவிஸ் நற்பணிச் சங்கத்தைச் சேர்ந்த ஆ. கணபதிப்பிள்ளை கல்லூரிப்பெயர் வளைவைச் செய்து கொடுத்துள்ளமை என்றும் நினைவில் நீங்காதவையாகும்.
கொலண்டில் வாழும் பழைய மாணவன் நா. இரத்தினசீலன் உதைபந்தாட்ட கம்பங்களை வழங்கியுள்ளமையும், ஜேர்மனியில் வாழும் சி. குகப்பிரகாசம் வலைப்பந்தாட்ட மைதானத்தைப் புனரமைப்பு செய்துதந்தமையில் கல்லூரியின்
கல்வி வளர்ச்சிக்குப் பேருதவியாகும். கணணி வகுப்பறை களை அமைத்து, கணணிகள் கைநெறிகளுக்கு ஊக்கமளித்த சுவிஸ் நற்பணிச்சங்கத்தைச் சார்ந்த கா.யுவநேசன், அ.பிரபா, சு.குகன் ஆகியோரின் தன்னலமற்ற சேவைகள் என்றும்
நினைவில் கொள்ளத்தக்கவை. மேலும் பரிசளிப்பு நிதியத்துக்கு நிதி அன்பளிப்புச் செய்ததோடு கல்லூரிக்குத் தெற்குப் பக்கமாகவுள்ள 6 பரப்புக்காணியை கொள்வனவு செய்து வழங் கியதோடு, ஆரம்பக்கல்வி வகுப்பறைத்திருத்தம், சைக்கிள்
தரிப்பிடம் என்பன செய்துள்ளமை பாராட்டத்தக்கதே.

மேலும் கல்லூரியின் பவளவிழா 2004இல் நடைபெற்றதோடு சுவிஸ் நற்பணி மன்றத்தினர் பவளவிழா மலருக்கானசெலவினை அன்பளிப்புச் செய்து ஊக்கமளித்துள்ளனர். லண்டனில் வாழும் பழைய மாணவர்களும் நலன்விரும்பி
களும், 25.09.2004இல் அங்கும் பவளவிழா ஒன்றை நடாத்திக் கல்லூரியின் புகழை நாடறியச் செய்த பெருமை பாராட்டுக்குரியதே. கலைமாலை என்னும் சிறப்பு மலரும் வருடாவருடம் வெளியிட்டு வருவது கல்லூரி மீது அவர்கள் கொண்ட நன்மதிப்பை எடுத்துக்காட்டுவதாகும். 2012ஆம் ஆண்டு மேற்படிசங்கத்தின் 10வது ஆண்டு நிறைவு விழா கொண்டாடப்பட்டதுசிறப்பிற்குரியதே.
கல்லூரியின் தேவைகருதி காலத்துக்குக் காலம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் உதவி வருவது நன்றிக்குரியதாகும். தளபாடத்தேவைகள், பான்ட் வாத்தியக் கருவிகள்,
பிரதான மண்டப இருக்கைகள் என்பன நாடாளுமன்ற உறுப்பினர்களின் பன்முகப்படுத்தப்பட்ட நிதியிலிருந்து கொள்வனவு செய்யப்பட்டமை குறிப்பிட்டத்தக்கதாகும். பழைய மாணவர் களால் பெற்றோர் ஞாபகார்த்தமாகப் பரிசளிப்பு நிதியம் உருவாக்கப்பட்டு வருடாந்தம் பரிசளிப்பு விழாவிற்கு ஊக்க
மளித்து வருவது பாராட்டப்பட வேண்டியதே. சுவிஸ் நற்பணி மன்றத்தினரும், ஐக்கிய ராச்சிய பழைய மாணவர் சங்கம், நீர்வேலி நலன்புரிச் சங்கம் கனடா என்பன நீர்வேலிக் கிராமத்தின் கல்வி வளர்ச்சியில் அக்கறை கொண்டு காலத்துக்குக்
காலம் உதவிவருவது பாராட்டுக்குரியதே.

நிக்கொட் நிறுவன அமைப்பினால் கல்வித்திணைக்களத்தின் வழிகாட்டலோடு அத்தியார் அருணாசலம் அவர்களால் அமைக்கப்பட்ட பிரமாண்டமான கட்டடத்தொகுதிகளோடு மேலும் 110 அடி நீளமும் 25 அடி அகலமும்
கொண்டதுமான இரு மாடிகளாக அமைக்கப்பட்டு மைதான நிகழ்வுகளை மாடியிலிருந்தே பார்க்கக்கூடியதாக மண்டப அமைப்போடு கூடிய வகுப்பறைகள் கொண்ட கட்டிடம் அமைக்கப்பட்டு 15.02.2009இல் யாழ். அரச அதிபர் உயர்திரு.
கே.கணேஷ் அவர்களால் திறந்து வைக்கப்பட்டது பாடசாலையின் வளர்ச்சியை மேலும் பிரதிபலிப்பதாகும். இக்கட்டட அமைப்பிற்கு நிதிப்பற்றாக்குறை ஏற்பட்ட
போது ஐக்கிய ராச்சியத்திலுள்ள பழைய மாணவர் சங்கத்தினர் ரூபா 5 லட்சம் அன்பளிப்பு செய்துள்ளமை பாராட்டிற்குரியது. இக்கல்லூரியின் தேவைகருதி 40′ ஒ 20′ அளவு கொண்ட புதிய செயற்பாட்டறை உருவாக்கப்பட்டு வருவது
குறிப்பிடத்தக்கதே.

மேலும் இக்கல்லூரியின் ஆரம்ப காலத்தில் ஸ்தாபகர் முதலியார் அத்தியார் அருணாசலம் அவர்களால் அமைக்கப்பட்ட புராதனம்மிக்க வடக்கு மண்டபம் 125′ ஒ 25′ அளவு கொண்டது. ‚நீர்வேலி நலன்புரிச் சங்கம் கனடா‛ என்ற அமைப்பினால் சுமார் 12,40,237 ரூபா 50 சதம் செலவில் வகுப்பறைக்கூடங்கள் அமைக்கப்பட்டு, கூரை திருத்த வேலைகள்செய்யப்பட்டு புதுப்பொலிவுடன் காட்சி தருகின்றது இந்த
அமைப்பின் செயற்பாடுகளைப் பாராட்டுகின்றோம். 1967ஆம் ஆண்டு மைதான அபிவிருத்திக்காக திரு.க.வே. கனகரத்தினம் JP அவர்கள் வழங்கிய காணி
களோடு மேலும் அபிவிருத்தி செய்வதற்காக 2002ஆம் ஆண்டு கல்லூரியின் உபஅதிபராக விளங்கி இளைப்பாறிய இணுவிலைச் சேர்ந்த திரு. த. அமிர்தலிங்கம் தம்பதிகள் மைதானஅபிவிருத்திக்காக 2 பரப்புக்காணியகை; கொள்வனவு செய்து
அன்பளிப்பாக வழங்கியமை என்றும் பாராட்டுக்குரிய தாகும்.மேலும், மைதான அபிவிருத்திக்காக லண்டனில் வாழும் பழைய மாணவன் மா.திருவாசகம் தம்பதிகள் சுமார் 38 பரப்புக் காணியை தமது சொந்த அன்பளிப்பாக வழங்கியுள்ளமை பாராட்டப்பட வேண்டியதே. நீர்வேலி மேற்கைச் சேர்ந்த பழைய மாணவன் அ.சுப்பிரமணியம், இளைப்பாறிய பண்டிதர் செ.துரைசிங்கம், பண்டிதை சத்தியதேவி துரைசிங்கம் ஞாபகார்த்தமாக அவர்களது பிள்ளைகள், பேரப்பிள்ளைகள் அன்பளிப்பாக வழங்கியது. சுப்பையா பொன்னம்பலமும் இலக்குமிதேவியும், மற்றும் இராசையா மனோகரன், இரஞ்சிதகுமார், வரதராசன், வசந்தகுமார், நந்தகுமார், பொன்னையா,கமலாகரன், நடராசா சிவகுமாரனும் இராசேஸ்வரி ஆகிய
வர்கள் வழங்கிய காணிகளைக் கொண்டு அத்தியார்அருணாசலம் அவர்களின் கனவு நினைவாகும் வகையில்இன்று (8) எட்டு ஏக்கர் விஸ்தீரணம் கொண்ட காணியில் பாரிய கட்டட வசதிகளோடு, பிரமாண்டமான விளையாட்டு மைதானத்தையும் கொண்டதாக இக்கல்லூரி விளங்குகின்றது.யாழ் மாவட்டத்திலுள்ள கல்லூரிகளின் விளையாட்டு மைதானங்களில் பாரிய விசாலமானதும், பல வசதிகளைக்
கொண்டதுமாக இக்கல்லூரி மைதானம் விளங்குகின்றதென
2011இல் நடைபெற்ற வருடாந்த விளையாட்டுப் போட்டிக்குப்
பிரதம விருந்தினராகக் கலந்துகொண்ட கல்வி, விளையாட்டமைச்சின் செயலாளர் கௌரவ இ. இளங்கோவன் அவர்கள் பாராட்டியமையை இவ்விடத்தில் குறிப்பிடுவது பொருத்தமானதேயெனக் கருதுகின்றேன்.

மேலும் கல்லூரி வளாகம் 8 ஏக்கரில் விஸ்தரிக்கப்பட்டிருப்பதும் அதற்கான பாதுகாப்பிற் காக சுற்றுமதில் கட்டும் பணிகள் பலரதும் ஆதரவுடன் நடைபெற்று வருவது பாராட்டுக்கும் பெருமைக்கும் உரியதேயாகும். விளையாட்டுத்துறை மாணவர்களுக்கான சீருடைகள் கனடாவில் வாழும் பழைய மாணவர்களால் அன்பளிப்பாக வழங்கப்பட்டது.
கல்லூரி வளர்ச்சியில் கல்லூரி நிர்வாகத்துக்குதவியாக பாடசாலை அபிவிருத்திச் சங்கமும், பழைய மாணவர் சங்கமும் தோள்கொடுத்துதவி வருவது கல்விவளர்ச்சிக்கு ஊன்று கோலாக அமைகின்றது. இன்னும் இக்கல்லூரி மாணவர்கள் பல்வகையான
போட்டிகளிலும் பங்குபற்றி கோட்டமட்ட, மாவட்ட மட்ட, தேசியமட்டப்போட்டிகளிலும் பங்குபற்றிக் கல்லூரிக்கும், கிராமத்துக்கும் புகழ்சேர்ப்பது பாராட்டப்படவேண்டியது.
குறிப்பாக 2010இல் NSI நிறுவனம் கல்வி அமைச்சின் அனுசரணையுடன் மாகாண மட்டத்தில் நடாத்திய கரப்பந்தாட்டப் போட்டியில் பெண்கள் 1ம் இடத்தில் தெரிவாகியிருப்பது பாராட்டுக்குரியதே. மேலும், இக்கல்லூரி மாணவர்கள் கல்வி
சார் போட்டிகளிலும் பங்குபற்றி பரிசில்கள் பெற்றுவருவது கல்வி வளர்ச்சிப் பாதையின் அங்கங்களே. தமிழியற்கட்டுரைப் போட்டி, இலக்கணப்போட்டி, குறுநாடக ஆக்கப்போட்டி,சிறுகதை ஆக்கப்போட்டி, சித்திரப்போட்டி முதலிய இன்னோரன்ன போட்டிகளிலும் கோட்டமட்டம், மாகாண மட்டங்களில்
பங்குபற்றிப் பரிசில்கள் பெற்றுவருவது எமது கிராமத்து கல்வி வளர்ச்சியின் முக்கிய பங்களிப்பாகும் என்பதைப் பாராட்டுவதில் பெரிதும் மகிழ்ச்சியடைகின்றோம்.

இன்னும் 2010ம் ஆண்டு நடைபெற்ற 5ம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையில் குறித்த கல்லூரி மாணவன் செல்வன் சுஜந் சிவலிங்கம் கோட்டமட்டத்தில் 2ம் இடத்தைப் பெற்றுக்கொண்டமை எமது கிராமத்தின் வளர்ச்சியின் ஓரங்க
மாகும்.
2010ஆம் ஆண்டு க.பொ.த (சாஃத) பெறுபேற்றின் ICT பாடத்தில் A தரச்சித்தியும், ஏனைய பாடங்கள் அனைத்தீலும்’B’ தரச்சித்தியும் த. தபீந்திரன் என்னும் மாணவர் பெற்றிருப்பது கல்வி அடைவின் படிமுறை வளர்ச்சியைக் காட்டும் குறியீடாக உள்ளது.
மேலும், பல்கலைக்கழகத்துக்கு வருடாந்தம் பல மாணவர்கள் தெரிவாவதும் எமது கல்வி வளர்ச்சியின் படிக்கற்களே.

2006ஆம் ஆண்டு க.பொ.த. (உ/த) கலைப்பிரிவில் யாழ். மாவட்டத்தில் இரண்டாம் நிலையில் அத்தியார் இந்துக் கல்லூரி மாணவன் சித்திபெற்றிருப்பது நாம் பெருமைப்பட வேண்டியவிடயமாகும்.
கலைப்பாடத்திட்டத்தில் எமது கல்லூரி மாணவர்கள் கோட்ட மட்டத்தில் 1ம் இடத்தில் தெரிவாகியிருப்பது பாராட்டப் படவேண்டியதே. அதேபோல வர்த்தகத்துறையிலும் கோட்ட மட்டத்தில் 2ம் இடத்தைப் பெற்றுக்கொண்டது பெருமைக்குரியதே. கல்லூரியில் இன்று 913 மாணவர்களும் 34 ஆசிரியர்களும் ஒரு அதிபரும் கல்விசாரா ஊழியர்களும் பணிபுரிந்து வருவது பெருமைக்குரியதாகும். ‚பொய்யாவிளக்கே விளக்கு‛ என்னும் மகுடவாசகத்தை உணர்த்தும் வகை
யில் செயற்பட்டுவரும் கல்வி நிர்வாகம்பாராட்டுக்குரியதே.

அப்பாடசாலையின் வளர்ச்சிப் பாதையில் பின்வருவோர் அதிபர் பணியை ஆற்றியுள்ளனர்.

 

அதிபர் பதவிக்காலம்
திரு. S. G. அருளானந்தம் 1929 – 1933
திரு. N. வெங்கடேஸ்வரன் 1933 – 1935
திரு. J. பொன்னையா 1935 – 1936
திரு. S. ஆறுமுகம் 1936
திரு. S. நவரட்ணம் நெல்சன் 1936 – 1947
திரு. V. சண்முகநாதன் 1948 – 1951
திரு. S. T. ஜீவரட்ணம் 1952 – 1954
திரு. V. G. சம்பந்தன் 1954 – 1966
திரு.S. ஸ்ரீநிவாசன் 1966 – 1971
திரு. P. K. இராசரட்ணம் 1971 – 1974
திரு. K. சொக்கலிங்கம் 1974 -(2 months)
திரு. K. நவரட்ணம் 1974 – 1976
திரு. S. சுவாமிநாத சர்மா 1976 – 1978
திரு. K. இராசரத்தினம் 1979 – 1984
திரு. S. சபாரத்தினம் 1984 – 1986
திரு. K. சிவசுப்பிரமணியம் 1987 – 1988
திரு. K. தங்கராசா 1988 – 1988 (1month)
திரு. A. கனகசுந்தரம் 1988 – 1993
திரு. வீ. கணேசராசா 1993 – 1996
திரு. S. விஸ்வலிங்கம் 1996 – 2002
திரு. இ. குணநாதன் 22.03.2002 – 01.11.2011
திரு. செ. பத்மநாதன் 02.11.2011 – 2014
திரு. கு. ரவிச்சந்திரன் 2014 – இன்று வரை

நோக்கு(vision)
சமுகத்துக்கு பொருத்தபாடுடைய மனித வளத்தையும் உத்தம குடிமக்களையும் உருவாக்குதல்.


பணி (mission)
*முறையான கலை திட்டத்தின் ஊடாக மாணவர்களின் திறன் மனப்பாங்கு என்பவற்றில் விருத்தியை ஏற்படுத்தல்.
*இணை கலைத்திட்டங்களினூடாக தலைமைத்துவம் சேவை மனப்பாங்கு பிறரை மதித்தல் முதலான நற்பண்புகளை உருவாக்குதல்.
*அனைவரையும் கணனித்துறையில் ஆரம்ப அறிவுடையவராக்குதல்.


தாரக மந்திரம் (motto)
பொய்யா விளக்கே விளக்கு.


கல்லூரி கீதம்
பல்லவி

ஜெய ஜெய மங்கள கல்லூரி மாதா
ஜெய சுப மங்கள ஜெயதே

(ஜெய..)

அனுபல்லவி

உத்தமா தலைவர் கல்லூரி ஸ்தாபகர்
அத்தியார் தம்புகழ் துதிப்போம்

(ஜெய..)

சரணம்

மனதினில் மாண்பும் செய்கையிற் சிறப்பும்
நினைவுறு குறியெனக் கொண்டோம்
நமதுறு துணையாம் இறைவன்
இணைமல ரடிகை தொழுது
எமதுறு கடமைகள் புரிவோம்

(ஜெய..)

ஓங்குக ஓங்குக நல்லறமெங்கும்
ஓங்குக விஞ்ஞானத் துறைகள்
என்றும் நின்றே நன்றாய்
எமதெழில் நீர்வையில் வாழி
ஓங்குக கல்லூரி மாதா

(ஜெய..)


ஆசிரியர்கள்

PRINCIPAL : MR.K.RAVICHANDRAN

DEPUTY PRINCIPAL  : MRS.T.MANOKARAN

SECTIONAL HEADS : MR.A.PERINPANAYAKAM & MR.B.J.NIRAZEN


TEACHERS 

  • MRS.R.SIVAKUMARAN
  • MRS.P.KENGATHARAN
  • MRS.T.APPUTHURAI
  • MRS.T.SIVANESHAKUMAR
  • MRS.T.NAGARAJAN
  • MRS.S.SANJEEV
  • MR.M.G.KENADY
  • MRS.S.VISUVASAM
  • MRS.V.SARAVANABAVANANTHAN
  • MISS.S.KIRIJA
  • MRS.N.THILAGARAJAH
  • MRS.I.RANJAN
  • MRS.T.KUGARAJAH
  • MR.S.KULENDRARAJAH
  • MR.S.VIJAYNATHAN
  • MRS.T.SATHEESKARAN
  • MRS.S.RAVEENDRAN
  • MRS.R.THUSYANTHAN
  • MRS.S.SANTHALINGAM
  • MRS.N.SOMASKANTHAN
  • MR.K.ANANTHARAJAH
  • MISS.N.MAGALINGAM
  • MR.S.KAJENDRAN
  • MISS.N.PATHMANATHAN
  • MISS.S.THARMALINGAM
  • MR.B.KANTHARUBAN
  • MRS.V.SHANMUGASUNTHARAMOORTHY
  • MR.S.UTHAYAKUMAR
  • MR.E.DIKUKUMAR
  • MR.T.THAVARAJAH
  • MRS.G.KANTHEEPAN
  • MRS.K.SIVARANGANI
  • MRS.A.SHANMUGAM
  • MRS.S.CHANDRAKOPAN
  • MRS.G.THAVARAJASINGAM.