நீர்வை கந்தனுக்கு கும்பாபிஷேகம்…
* வாகீசகலாநிதி. கி.வா.ஜ ஈழம் வரும் போதெல்லாம் வழிபாடாற்றும் திருக்கோயில்.
* கடம்பவிருக்ஷத்தை தலமரமாக கொண்ட திருத்தலம்.
* பக்தானுக்ரஹபாவனையில் அமைந்த அழகிய சண்முகர் விக்கிரஹம் உள்ள தலம்.
* புகழ்பூத்த சிவாச்சார்யரான இராஜேந்திர( இராசு) குருக்களால் தினமும் பூஜிக்கப்பட்ட திருத்தலம்.
* ஸ்கந்தசஷ்டிக்காலத்தில் த்வஜாரோஹண மஹோத்ஸவம் நடக்கும் தலம்
* சித்திராபூரணையை நிறைவாக கொண்டு பெருவிழா நடக்கிற தலம்.
* இத்தகு பேராலயத்தில் சென்ற தைப்பூசத்திற்கு பாலஸ்தாபனம் நிகழ்ந்து வரும் தைப்பூசத்தன்று மஹாகும்பாபிஷேகம் நிகழவுள்ளது.
* குருவருள் கூட்டும் பூச நாளில் குருவாரத்தில் இக்குடமுழுக்கு அமைவது மேலும் சிறப்பாகும்..
Thanks : Mayoorakiri Sharma