நீர்வேலி சியாக்காடு மயானத்திற்கு செல்லும் வீதி தற்போது புனரமைக்கப்படுகிறது.

நீர்வேலி சியாக்காடு மயானத்திற்கு செல்லும் வீதி தற்போது வலி.கிழக்குப் பிரதேச சபையால் 33 இலட்சம் ரூபா செலவில் புனரமைக்கப்படுகிறது.

Thanks : Jatheeshan

கடந்த காலங்களில் இவ் வீதி கடுமையான சேதத்துக்குள்ளாகியதால் இப்பகுதியைச் சேர்ந்த மக்கள் மழை காலங்களில் பெரும் சிரமங்களுக்கு மத்தியில் சடலத்தைக் கொண்டு சென்றனர்.

அத்துடன் இவ் வீதியில் உள்ள 2 பாலங்களில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் ஒரு பாலம் புனரமைக்கப்பட்ட நிலையில் தற்போது மற்றைய பாலமும் புனரமைப்பு செய்யப்பட்டு வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *