நீர்வேலி கந்தசுவாமிகோவில் திருக்குடமுழுக்குப் பெருவிழா.
நீர்வேலி அருள்மிகு கந்தசுவாமி கோவிலின் திருக்குடமுழுக்குப் பெருவிழா எதிர்வரும் 09.02.2017 வியாழக்கிழமை தைப்பூச தினத்தன்று பகல் 12.11 முதல் 2.02 வரையுள்ள சுபவேளையில் நடைபெறவுள்ளது.
.
இதனை முன்னிட்டான எண்ணெய்க் காப்பு நிகழ்வு 07 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை காலை 7 மணி தொடக்கம் இரவு 7 மணி வரை இடம்பெறவுள்ளது. திருக்குட முழுக்குப் பெருவிழாவையொட்டிய கிரியைகள் 06 ஆம் திகதி திங்கட்கிழமை காலை முதல் ஆரம்பமாகவுள்ளன.
.
திருக்குடமுழுக்குப் பெருவிழாவை ஆலயப் பிரதம குரு சிவஸ்ரீ இராஜேந்திர சுவாமிநாதக் குருக்கள் நிகழ்த்திவைப்பார்.
.
(பிரசுர மென்பிரதி : நன்றி : ஷாம்பவி பதிப்பகம்)