நீர்வேலி ஐக்கிய விளையாட்டுக்கழகம் நடாத்திய மென்பந்து சுற்றுப்போட்டியில் யாழ் மாவட்டத்தில் பிரபல்யம் வாய்ந்த 32 கழகங்கள் பங்குபற்றிய போட்டியின் இறுதிப்போட்டி 22.09.2018 ஐக்கிய விளையாட்டுக்கழக கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது இறுதிப்போட்டியில் யாழ்ப்பாணம் கார்மேல் பாய்ஸ் அணியும் பருத்தித்துறை வீனஸ் அணியும் மோதிக்கொண்டன . நாணய சுழற்சியில் கார்மேல் அணி வெற்றி பெற்று களத்தடுப்பை தெரிவு செய்தது . முதலில் துடுப்பெடுத்தாடிய வீனஸ் அணி 10 ஓவர் நிறைவில் 4 விக்கெட்ட்டுக்களை இழந்து 124 ஓட்ட்ங்களை பெற்றுக்கொண்டது அணி சார்பாக திருபரன் 59 ஓட்ட்ங்களையும் ராஜா 32 ஓட்ட்ங்களையும் அதிகபடசமாக பெற்று கொண்டனர் . பந்துவீச்சில் துஷன் 2 விக்கெட்டுக்களை கைப்பற்றினர் . 125 எனும் வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய கார்மேல் அணியினர் 9.3 ஓவர்களில் சகல விக்கெட்டுக்களை இழந்து 63 ஓட்ட்ங்களை பெற்றுக்கொண்டனர் . அவ் அணி சார்பாக அயன் 20 ஓட்ட்ங்களை பெற்றுக்கொண்டார் . பந்து வீச்சில் கயேந்திரன் 3 விக்கெட்டுக்களை கைப்பற்றினர் . 2018 ஆண்டுக்கான ஐக்கிய விளையாட்டுக்கழகத்தின் வெற்றிக்கிண்ணத்தை வீனஸ் அணி பெற்றுக்கொண்டனர் . இப்போட்டியின் ஆடடநாயகனாக வீனஸ் அணியின் திருபரன் தெரிவு செய்யப்படடர் . இத்தொடரின் சிறந்த பந்து வீச்சாளராக வீனஸ் அணியின் கயேந்திரன் தெரிவுசெய்யப்படடர்
இத்தொடரின் துடுப்படட வீரனாகவும் தொடர் நாயகன் விருதையும் கார்மேல் பாய்ஸ் அணியின் அயன் தெரிவு செய்யப்படடர். முதலிடத்தை பெற்ற அணிக்கு தலா 10,000/- ரூபாவும் இரண்டாவுது இடத்தை பிடித்துக்கொண்ட அணிக்கு 7000/- ரூபாவும் வழங்கப்படடன
Thanks : sarmi anna