……….
நீர்வேலி அரசகேசரிப் பிள்ளையார் கோவிலில் அலாரத்துடன் மணி அடிக்கும் பொறி பொருத்தப்பட்டுள்ளது. இதனால் நீர்வைக் கிராமம் முழுவதும் பிள்ளையார் கோவில் மணியோசை ஒவ்வொரு மணித்தியாலமும் ஒலிக்கவிடப்படுகின்றது.
.
ஆலயக் குரு சோ. சிவஜெயக் குருக்களின் முயற்சியில் பொருத்தப்பட்டுள்ள இந்த
தானியங்கி அலாரப் பொறி (Automatic Alarm Clock) காலை 4 மணி தொடக்கம் இரவு 10 மணி வரை ஒலிக்கவிடப்படுகின்றது.
.
காலை 6 மணி 8.30 மணி, நண்பகல் 12 மணி மாலை 6 மணி என நான்கு வேளைப் பூசைகள் நேரம் தவறாமல் இடம்பெறுகின்றன.
.
காலை 4 மணிக்கு பலத்த சத்தத்துடன் அலாரம் ஒலிப்பதால் பிள்ளைகள் அதிகாலை நித்திரை விட்டு எழுந்து படிப்பதற்கு உதவும் செயலாகவும் இது அமைவதாக ஊரில் உள்ள ஆசிரியர் ஒருவர் தெரிவித்தார்.
.
யாழ்ப்பாணத்தில் முதன் முதலாக அலார மணி நல்லூர் கந்தசுவாமி கோவிலில் பொருத்தப்பட்டது
Thanks : laleesan sir