நீர்வேலி நலன்புரிச் சங்கம், ஐக்கிய இராச்சியத்தின் நீர்வேலி கிளையின் ஆரம்பகால உறுப்பினரும் சமூக சேவையாளருமாகிய திருமணி ருக்மணி ஆனந்தவேல் அவர்களுக்கு கௌரவிப்பு விழாவை நடத்துவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுவருகின்றன. இவ் விழாவினை நீர்வேலி நலன்புரிச் சங்கம்- ஐக்கிய இராச்சியம், நீர்வேலி நலன்புரிச் சங்கம்- ஐக்கிய இராச்சியம் – நீர்வேலி கிளை, நீர்வேலி தெற்கு மாதர் அமைப்புக்களும் இணைந்து ஒழுங்கமைத்துள்ளர்கள். இவ் விழா 18.09.2016 ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 2.00 அளவில் நீர்வேலி தெற்கு மாதர் கிராம அபிவிருத்தி சங்க மண்டபத்தில் நீர்வேலி கிளையின் தலைவர் திரு. இ. குணநாதன் அவர்களின் தலைமையில் நடைபெறும். இவ் விழாவிற்கு ஐக்கிய இராச்சியத்தில் இருந்து பலர் கலந்து கொள்ளவுள்ளனர். அனைவரும் இவ் விழாவிற்கு கலந்து கொள்ளுமாறு கேட்டுகொள்ளப்படுகிறார்கள்.