நீர்வேலி கரந்தன் இராமுப்பிள்ளை வித்தியாலயம் சுகாதார அமைச்சால் நாடத்தப்பட்ட டெங்கு அற்ற பாடசாலை எனும் போட்டியில் கோப்பாய் பிரதேச மட்டத்தில் முதலிடம் பெற்று ரூபா 5 000 பணப் பரிசிலையும் மாவட்ட மட்டத்தில் முதலிடம் பெற்று ரூபா 10 000 பணப் பரிசிலையும் மாகாண மட்டத்தில் இரண்டாம் இடம் பெற்று ரூபா12 500 பணப் பரிசிலையும் பெற்றுக்கொண்டுள்ளது. அத்துடன் டெங்கு ஒழிப்பு பற்றிய சித்திரப் போட்டியில் பங்குபற்றி செல்வன். ஜெயசீலன் சிவசங்கர் எனும் மாணவன் பிரதேச மட்டத்தில் 3 ஆம் இடம் பெற்று ரூபா 2000 பணப்பரிசிலையும் பெற்றுள்ளார்.. மேற்படி அடைவுகளை அடைவதற்கு பாடுபட்ட வித்தியாலய அதிபர், ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பாடசாலை சமூகத்தினருக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறோம்.