சிவதொண்டன் செல்லத்துரை சுவாமிகள் பற்றிய நூல் வெளியீடு நீர்வேலியில்…

சிவதொண்டன் தவத்திரு செல்லத்துரை சுவாமிகள் என்ற பொருளில் அமைந்த நூல் வெளியீடு எதிர்வரும் 16.12.2018 ஞாயிற்றுக்கிழமை நீர்வேலி அரசகேசரிப் பிள்ளையார் ஆலயத்தில் இடம்பெறவுள்ளது.
.
நீர்வேலி அரசகேசரிப் பிள்ளையார் ஆலய அடியார்களின் வெளியீடாக அமையும் இந்நூலை மூத்த ஆசிரியர் த.ந. பஞ்சாட்சரம் அவர்கள் ஆக்கியுள்ளார்.
.
தற்போது 89 வயதை நிறைவு செய்துள்ள ஆசிரியரின் விருப்பிற்கிணங்க இந்நூல் ஆலய மண்டபத்தில் வெளியீடு செய்யப்படவுள்ளது. விழா ஏற்பாடுகளில் ஓய்வு பெற்ற கிராம வங்கியாளர் ச.க. முருகையா, இளைப்பாறிய அத்தியார் இந்து அதிபர் இ.குணநாதன், கிராம அலுவலர் சு. சண்முகவடிவேல், ஆசிரியர் சீ.கமலதாஸ் உள்ளிட்டோர் ஈடுபட்டுள்ளனர்.
.
சிவதொண்டன் செல்லத்துரை சுவாமிகள் சரசாலையைப் பிறப்பிடமாகக் கொண்டவர். தந்தை சி.அருணாசலம் நீர்வேலியைச் சேர்ந்தவர். தாய் கதிராசிப்பிள்ளை சரசாலையைச் சேர்ந்தவர். சுவாமிகள் முன்னர் ஆசிரியராகப் பணி செய்தவர். 07.04.1914 இல் பிறந்த இவர் யோகர் சுவாமிகளின் அணுக்கத் தொண்டராக வாழ்ந்து 12.04.2006 இல் சித்தியடைந்தார்.
Thanks : laleesan sir

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *