கார்பெட் வீதியாகவுள்ள கரந்தன் வீதி

பருத்தித்துறை வீதியையும் பலாலி வீதியையும் இணைக்கின்ற எமது ஊரின் பிரதான வீதிகளாகிய கரந்தன் வீதி, நீர்வேலி குறுக்கு வீதி ஆகிய இரு வீதிகளும் I- Road திட்டத்தின் கீழ் விரைவில் செப்பனிடப்படவுள்ளன

நீர்வேலி கந்தசுவாமி கோயில் – கரந்தன் சந்தி – ஊரெழு வரையிலான வீதியின் (கரந்தன் வீதி) செப்பனிடுதல் பணிகள் தொடர்பாக பொறியியலாளர் குழுவினருக்கும் மக்களுக்கும் இடையிலான சந்திப்பு நீர்வேலி தெற்கு மாதர் சங்க மண்டபத்தில் இன்று காலை(17/01/2019) நடைபெற்றது.

வீதி ஊடறுத்து செல்லும் நீர்வேலி தெற்கு, நீர்வேலி மேற்கு, ஊரெழு மற்றும் உரும்பிராய் கிழக்கு பிரதேசத்தை சேர்ந்த மக்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *