இந்நிகழ்வானது கடந்த ஜூன் 25ஆம் திகதி இடம் பெற்றது. இந் நிகழ்வு குறித்து கலை ஏற்பாட்டுக்குழுவினர் கருத்து வெளியிடுகையில்,கலை, கலாச்சாரம் மற்றும் பொழுதுபோக்குடன் உள்ளூர் திறமைசாலிகளையும் ஊக்குவிக்கும் நிகழ்வாக இந்நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டது.
இதில் நீர்வேலி கல்வி நிறுவனங்களுக்கு உதவும் பொருட்டு நிதி திரட்டும் முயற்சியில் முன்னாள் மாணவர்கள், நலம் விரும்பிகள் ஆகியோர்கள் ஒன்றிணைந்து இந்த நிகழ்வினை நடாத்தி இருந்தனர்.
இதேவேளை ரசிகர்களை சோர்வடைய விடாத இசைக் கச்சேரியினை ராகாஸ் இசைக்குழுவினர் நடாத்தி இருந்தனர். ரசிகர்களுக்குள் இருந்து எவரும் பாட முன்வரலாம் என்றும் மக்களை ஊக்குவித்திருந்தனர்.
அத்துடன் வளர்ந்து வரும் கலைஞர்களை உருவாக்கிக் கொண்டிருக்கும் சக்தி அனுஷா சஜீவின் மாணவர்களும் கலந்து கொண்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Photo source : Lankasri