நீர்வேலி கரந்தன் இராமுப்பிள்ளை வித்தியாலயத்தில் இணைப்பாட விதான செயற்பாடுகளில் ஈடுபட்டு கோட்ட, வலய போட்டிகளில் வெற்றியீட்டிய மாணவர்களுக்கு Prem Electrical Engineering managing director திரு. எ. ரெட்எடின் அவர்கள் ரூபா 15 000 பெறுமதியான பரிசுகளை அன்பளிப்பு செய்துள்ளார்.
இப் பரிசில்களை கோட்டக் கல்விப் பணிப்பாளர் திரு. நா. சிவநேசன், ஆரம்பக் கல்வி உதவிப் பணிப்பாளர் திரு. ப. சசிக்குமார், ஓய்வு நிலை ஆசிரியர் திரு. R. இராஜேந்திரம், திரு. எ. ரெட்எடின் ஆகியோர் வழங்கி வைத்தனர்.









