யாழ்ப்பாண பூர்வீகக் குடிகள் நாகசாதியர்கள் அவர்கள் நாகவழிபாடுடையவர்கள். நாகதம்பிரான், நாகபூசணியம்மாள் கோயில்களும் நாச்சிமார் கோயில்களும் எல்லைக் கிராமங்களில் அமைந்திருந்தமையால் இவைகள் எல்லைக்காவல் தெய்வங்கள் என்னும் சிறப்பிற்குரியன.
அந்த வகையிலேயே கோப்பாய் நீர்வேலி எல்லையில் அமைந்ததே நீர்வேலி தெற்கு நாச்சிமார் கோயில். அதேபோல
வடக்குக் கிழக்கெல்லையில் அமைந்தது நீர்வேலி வடக்கு முழக்கம்பிட்டி தாழைகள் சூழ்ந்த இடத்திலேயே அமைந்துள்ள நாச்சிமார் ஆலயம், இவை இரண்டு கோயில்களும், மேலும் வயலும் வயல்சார்ந்த இடமுமான பன்னாலையில் ஸ்ரீ
திருச்சீச்சரம் சப்த கன்னிகள் கோயில், நீர்வேலி மேற்கில் நாகபூசணி அம்மன் என்னும் ஆலயங்கள் அமைந்துள்ளமை கிராமத்துக்குச் சிறப்பைத் தருவதாகும். இவ்வாலயங்கள் தோட்ட நிலப்பரப்பிலிலேயே அமைந்துள்ளமை கிராமத்துக்குச்
சிறப்பைத் தருவதாகும். இவ்வாலயங்கள் தோட்ட நிலப்பரப்பிலேயே அமைந்து விவசாயச் செய்கைக்கு அருளூட்டுவதாக அமைந்துள்ளன. நீர்வேலி தெற்கு நாச்சிமார் கோயில் கட்டிடங்கள் அழிந்த நிலையிலிருந்து புனரமைப்புச் செய்யப்
பட்டதோடு மடைப்பள்ளியும் புதிதாக அமைக்கப்பட்டுள்ளது.
அண்மையில் கும்பாபிஷேகம் செய்யப்பட்ட இக்கோவிலில் பொங்கல் வழிபாடுகள் தொன்று தொட்டு நடைபெற்றுவரும் சிறப்பிற்குரியது.
நீர்வேலிக் கந்தசுவாமி கோவில் முருகன் வேட்டைத்
திருவிழாவிற்கு இந்த நாச்சிமார் கோவிலில் வேட்டையாடுவதும், அயலிலுள்ள இலுப்பையடிப்பிள்ளையார் கோவிலில் இளைப்பாறி ‚சிரமபரிகாரம்‛ செய்வதும் நீண்டகால வழக்கமாகும். இதற்குப்பின் பண்டிதர் வேலுப்பிள்ளை அவர்களின்
எல்லைமானப்பந்தலில் இளைப்பாறுவது வழமையாகவுள்ளது. இவ்வாலயம்பற்றி இன்னொரு வரலாறும் அறியக்கிடக்கின்றது. வெள்ளையர் ஆட்சிக் காலத்தில் ஏற்பட்ட
அசம்பாவிதங்களின்போது தனது மானத்தைக் காப்பதற்காக தற்கொலை செய்துகொண்ட இளவரசியின் சமாதியெனவும், இங்கு அவரது பாவனைப் பொருட்களான ஆடை அணி கலன்கள் அடங்கிய பேளை ஒன்று தாக்கப்பட்டதாகவும்
இதனால் அரசிளங்குமாரியாகிய நாச்சிமாரின் சமாதி அமைந்ததால் ‚நாச்சிமார் கோயில்‛ எனவும் தாழம்பத்தையில்நாகபாம்புகள் வசித்து வந்ததால் அங்கு நாகதம்பிரான்வழிபாடு மேற்கொள்ளப்பட்டதாகவும் அறியக்கிடக்கின்றது.
மேலும் 1வது உலக யுத்தகாலத்தில் விமானத்தளம் அமைக்கத் திட்டமிட்டமையும், தாழம்பத்தைகளிலிருந்து நாகபாம்புகள் சீறிக்கொண்டு வந்ததால் முற்றாக தாழம்பத்தைகளை அழிக்கமுடியாமற்போனதாலும், சதுப்புநிலத்தில் விமானம் புதைந்ததாலும் இப்பகுதி விமானத்தள நிலையத்துக்குப் பொருந்தாதெனவிட்டுச் சென்றதாகவும் அறியக்கிடக்கின்றது.