நீர்வேலி அரசகேசரிப் பிள்ளையார் கோயில் தொடர் சொற்பொழிவு நாள்- 6


நீர்வேலி அரசகேசரிப் பிள்ளையார் கோவிலில் மகோற்சவத்தின் போது மாணவர்களை மையப்படுத்திய சொற்பொழிவுகள் முன்னெடுக்கப்படுகின்றன. இரவு 6.30 மணி முதல் 7.30 மணி வரை இடம்பெறும் இச்செயற்பாடுகளை ஆலய பிரதம குரு சிவஸ்ரீ சா. சோமதேவக் குருக்கள், ஓய்வு பெற்ற அதிபர் இ.குணநாதன், ஆலய பொருளர் க. முருகையா போன்றோர் முன்னின்று நெறிப்படுத்துகின்றனர்.

இன்றைய நாளில் கோப்பாய் ஆசிரிய கலாசாலை பிரதி அதிபா் செந்தமிழ்ச்சொல்லருவி ச.லலீசன் சொற்பொழிவாற்றினாா். இன்று அவருடைய பிறந்ததினத்தை முன்னிட்டு அவரது சேவைகளை மதிப்பளிக்கும் முகமாக ஆலய நிர்வாகத்தால் கெளரவிக்கப்படடார்.

உரையின் நிறைவில் பிள்ளைகளுக்கு சமய அறிவுப் போட்டி (உரை தொடர்பாக) நடத்தப்பட்டு உடனடியாக உபயகாரர்களால் பரிசும் வழங்கப்படுகின்றது.பிள்ளைகள் அதிகளவில் வருவதால் கூடவே பெற்றோரும் சேர்ந்து வருகின்றனர். இரவுத் திருவிழாவில் அதிகளவானோர் பங்கேற்க இது வாய்ப்பாக உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *