பாலர்பகல்விடுதி வருடாந்த விளையாட்டு விழா எதிர்வரும் 28.05.2016 சனிக்கிழமை பி.ப. 2.00 மணியளவில் நீர்வேலி கந்தசுவாமி கோவில் தெற்கு வீதியில் அமைந்துள்ள சுப்பிரமணிய சனசமூகநிலைய முன்றலில் நடைபெறவுள்ளது. திரு.செ.பத்மநாதன் அவர்கள் (பாலர்பகல்விடுதி தலைவர் ) தலைமையில் நடைபெறும் இவ் விளையாட்டு விழாவில் யாழ் கிளிநொச்சி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் திரு.தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்கள் பிரதம விருந்தினராக கலந்துகொள்ளவுள்ளார். அத்தியார் இந்துக்கல்லூரியின் உபஅதிபர் திருமதி விஜயகுமாரி ஜெயக்குமார் அவர்களும் நீர்வேலி தெற்கு கிராமசேவையாளர் திரு.செ.வசந்தகுமார் அவர்களும் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொள்ளவுள்ளனர், திருமதி துரைராசசிங்கம் புஸ்பாவதி(பிரான்ஸ்) அவர்களும் திருமதி குமாரசாமி இராசமலர் அவர்களும் கௌரவ விருந்தினர்களாக கலந்து கொள்ளவுள்ளனர்.