கல்வி

சிவசங்கரபண்டிதரின் கல்விப்பணி
எமது நீர்வைக் கிராமத்தில் வடமொழி, தென்மொழிக் கல்வி வழங்கப்பட்ட வரலாறு தொன்மையானது. தென்மொழிகளில் பாண்டித்தியம் பெற்றதோடு, ஆங்கிலமொழியறிவும் பெற்றிருந்த ஸ்ரீலஸ்ரீ சிவசங்கர பண்டிதர் அவர்கள், தனது
இல்லத்திலெயே மாணவர்களை அழைத்து, சமஸ்கிருதம். தமிழ் இலக்கணம். இலக்கியம் என்பனவற்றைப் போதித்ததோடு, புராண படனங்களையும் கற்பித்தார். இதனால் பண்டிதரின் வீடு ‚கலைமகள் உறையும் நிலையமாக‛ அமைந்தது.
மாணவர்களுக்குப் போதிப்பதும். கிரக்தங்களைப் பரிசோதித்து எழுதுவதும் இவருக்கு இடையறா வேலையாகவிருந்தது.இவரது வீடு திண்ணைப் பள்ளிக்கூடமென அழைக்கலாயிற்று.,எனவே, நீர்வேலியில் கல்விப் பணிக்கு வித்திட்டவர் ஸ்ரீலஸ்ரீ
சிவசங்கரபண்டிதரே என்பதை யாரும் மறுக்க முடியாது.

ஸ்ரீலஸ்ரீ சிவசங்கரபண்டிதர் அவர்களின் சமயப்பணி,கல்விப் பணிகளைப் பாராட்டிப் பல பெரியோர்கள் வாழ்த்தியுள்ளனர்.

“ஆகமவேத மனைத்தையுமளித்து
ஏகனே இவ்வுருவென்னத்தோன்றிய
சங்கரபண்டிதன்றான் மலர் தமியேற்
கெங்குமாய் நிற்குமிலலை பிறவெனவே”, என
சுன்னாகம் முருகேசு பண்டிதரும்,

“சைவத்தை நாட்டி, பரமதமோட்டத் தயங்குமொரு
தெய்வத்தைப்போல் வரு சங்கரபண்டிதர்”, என
சுன்னாகம் குமாசமிப் புலவரும்,

“வடமொழிக்கடலும். வண்டமிழ்க் கடலும்
மொருங்கு குடித்திடுமொப்பிலாப் பெரியோன்”, என
கோயமுத்தூர் நாகலிங்க சுவாமிகளும்

“வாதிகளோடவும், நீதிகணீடவும் பூரண
சிவாகமப் பொருளினையே பிரசாரணஞ்செய்யுஞ்
சைவசிகாமணி” எனவும் புகழ்ந்து கூறியுள்ளார்

ஸ்ரீலஸ்ரீ சிவசங்கரபண்டிதரைப் போன்று நீர்வேலியில் கல்விப்பணிக்கென்று உழைத்த பீதாம்பரப்புலவர், சிதம்பரநாதப்புலவர், விஸ்வப்பிரம்மஸ்ரீ கனகசபாபதி ஆச்சாரியப்
பெருந்தகை, வைத்திலிங்காச்சாரியப் பெருந்தகை, பிரம்மஸ்ரீ முத்துக்குமார ஆச்சாரிய சுவாமிகள் போன்றவர்களும் தமது வீடுகளில் தமிழ் இலக்கண, சமஸ்கிருத, புராண, இதிகாச வகுப்புகள் நடாத்தி வந்தமை நினைவுகூரப்பட வேண்டியதே. அன்று ஸ்ரீலஸ்ரீ சிவசங்கரபண்டிதர் அவர்களால் ஆரம்பித்து நடாத்தப்பட்ட திண்ணைப்பள்ளிக்கூடமே நாளடைவில் சைவப்பிரகாச வித்தியாசாலையாக வளர்ந்து| இன்று நாம் காணும் ‚அத்தியார் இந்துக் கல்லூரி‛யாகப் பிரகாசிக்கின்றது. சிவசங்கரப்பண்டிதர் அவர்களின் பணியைத் தொடர்ந்து, அவரது சிரேஷ்ட புத்திரன் சிவப்பிரகாச பண்டிதர் 1880இல் சைவப்பிரகாச வித்தியாசாலையமைத்து, தந்தையாரின் பணியைத் தொய்யவிடாது, நடாத்தி வந்தார்| அவரைத்தொடர்ந்து அவரது சகோதரன் சிவகுருநாதபிள்ளையும், இதே
கல்விப் பணியைத் தொடர்ந்தார்.

சிவகுருநாதபிள்ளை சிவகதியடைந்தபின் சிவப்பிரகாச பண்டிதரின் மகன்
நடராசபிள்ளையும் தொடர்ந்து கல்விப் பணியாற்றிவந்தமை குறிப்பிடத்தக்கது. இவர்களது குடும்பம் ‚”பண்டிதர் கோட்டம்” என அழைக்கப்பட்டு வந்தமை மறக்க முடியாததாகும்.

பண்டிதர் நடராசபிள்ளை வித்தியாசாலையை விற்க முற்பட்டதையும், அதை மிசனரிமார் வாங்க வெளிப்பட்டதையும் அறிந்த பெரியார் அத்தியார் அருணாசலம் அவர்கள் அன்றிருந்த வித்தியாசாலைக் கட்டிடத்தையும், அதனோடி
ணைந்திருந்த கிணறும் அமைந்த இரண்டு (2) பரப்புக்காணியையும் விலைகொடுத்து வாங்கினார்.

சமஸ்கிருத கல்விச் சிறப்பு

நீர்வேலிக் கிராமம் தமிழ்மொழி வளர்ச்சி ஆங்கில மொழி வளர்ச்சிக்குத் தொண்டாற்றுவது போல சமஸ்கிருத மொழிவளர்ச்சிக்கும் தொண்டாற்றிவந்தமை குறிப்பிடத்தக்கது. இக்கிராமத்தில் திண்ணைப்பள்ளிக்கூடமைத்து கல்விப்
பணி ஆரம்பித்த சிவசங்கரபண்டிதர் அவர்களை சமஸ்கிருதகல்விப் போதனையையும் ஆரம்பித்துவைத்த பெருமைக்குரியவர், இவரது திண்ணைப்பள்ளிக்கூடத்தில் நாட்டின் பல பாகத்து மாணவர்களும் கற்று வந்தனர். இவர் சமஸ்கிருத் திராவிட விற்பன்னராகிய வேதாரணிம் சுவாமிநாத தேசிகரிடம்
சித்தாந்த உபதேசம் பெற்றவர். சமஸ்கிருத பாலபாடம்,சமஸ்கிருத இலக்கணம் என்பனவற்றோடு மேலும் ஏழு சமஸ்கிருத புத்தகங்களையும், சமஸ்கிருத தமிழ்மொழி பெயர்ப்பு நூல்களையும் வெளியிட்டதோடு, சமஸ்கிருதத்தில் நீண்ட
சொற்பொழிவுகளையும் நிகழ்த்த சமஸ்கிருதமொழி வளர்ச்சிக்குத் தொண்டாற்றியுள்ளார். இவரது மகன் சிவப்பிரகாச பண்டிதரும் தந்தை வழி
நின்று சமஸ்கிருதமொழி வளர்ச்சிக்குத் தொண்டாற்றியுள்ளார். சமஸ்கிருதபாலபாடம், சமஸ்கிருதபாலாமிர்தம் என்னும் நூல்
களையும் வெளியிட்ட பெருமைக்குரியவர்.நீர்வேலி வடக்கில் வாழ்ந்து இந்தியாவில் சமாதியடைந்த விஸ்வப்பிரம்மனரான முத்துக்குமார ஆச்சரிய சுவாமி
களும் சமஸ்கிருதவிற்பன்னராக விளங்கி சமஸ்கிருத போதனைகள் செய்தும், புத்தகங்கள் வெளியிட்டும் சமஸ்கிருத வளர்ச்சிக்குத் தொண்டாற்றியுள்ளார். இவர் இந்தியாவில் பொள்ளாட்சி வேட்டைக்காரன் புதூரில் சமாதியடைந்துள்ளார்.
மேலும் இப்பகுதியில் வாழ்ந்து சின்னையர், பெரியையர்என அழைக்கப்பட்ட சிவபூசாதுரந்தார்களான விஸ்வப்பிரமணர்களான வைத்திலிங்காச்சாரி, கனகசபாபதி ஆச்சாரி என்பவர்களும் தமது வீட்டில் சமஸ்கிருத வகுப்பு நடாத்தி தொண்டாற்றியுள்ளார்கள். இவர்களின் மாணவரே காமாட்சி அம்பாள் ஆலய பரிபாலகரும், பூசகராக விளங்கியவருமான சின்னப்பு தர்மலிங்கம் ஆவார்.

நீர்வேலி வாய்க்கால்தரவைப் பிள்ளையார் கோவில் பிரதம குருக்களாக விளங்கியவரும், ஆதீனகர்த்தாவுமாகிய சிவஸ்ரீ சு. ஆபதோத்தாரணக்குருக்கள் (பிச்சாடனக் குருக்கள்) அவர்களும் சமஸ்கிருத போதனை செய்த பெருமைக்குரியவர்.

நீர்வேலி அரசகேசரிப் பிள்ளையார் கோவிலடியில் வாழ்ந்த க.தியாகராசக் குருக்கள் (வியாபாரி ஐயா) அவர்களும் சமஸ்கிரகப் பணியாற்றிய பெருமைக்குரியவர். இன்னும் இவ்வாலயத்தைச் சேர்ந்த கார்த்திகேய ஐயர், அவரது மகன் சாம்பசதா சிவகுருக்கள், அவரைத் தொடர்ந்து சோமதேவக் குருக்கள் ஆகியவர்களும் சமஸ்கிருத கல்விப் பணியாற்றியமை குறிப்பிடத்தக்கது.

நீர்வேலிக் கந்தசுவாமி கோவில் பிரத குருக்கள் சிவ ஸ்ரீசு. இராசேந்திரக் குருக்கள் தனது வீட்டில் சமஸ்கிருத வகுப்புநடாத்தி சமஸ்கிருத வளர்ச்சிக்குத் தொண்டாற்றியமை உலகறிந்த உண்மையே. யாழ் மாவட்டத்தின் பல பாகங்களிலு
மிருந்து பலர் வந்து சமஸ்கிருத கல்வி கற்றமை பாராட்டப்படவேண்டியது. குருக்கள் அவர்கள் சமஸ்கிருத நூல்களையும் வெளியிட்டு சமஸ்கிருத வளர்ச்சிக்குத் தொண்டாற்றியுள்ளார்.

மேலும் சைவத் தமிழ்ப்பேரறிஞர் சிதம்பரப்பிள்ளை ஆசிரியர், கு. சிற்சபேசன், பண்டிதர் பொன். இராமுப்பிள்ளை, பண்டிதர் செ. துரைசிங்கம் போன்றவர்களும் சமஸ்கிருத அறிவுள்ளவர்களாக விளங்கியமை நினைவுரப்படவேண்டியதே.
நீர்வேலி அத்தியர் இந்துக்கல்லூரி ஸ்தாபகர் அத்தியார் அருணாசலம் அவர்களும் சமஸ்கிருதப் பற்றுடையவர். இதனால் அக்கல்லூரி ஆரம்பகாலத்தில் சமஸ்கிருத வகுப்பு களும் நடாத்த ஒழுங்குகள் மேற்கொள்ளப்பட்டதாக அறியக்
கிடக்கின்றது.

வியாபாரி ஐயர் எனப்படும் க. தியாகராசாக்குருக் களின் மகன் நடன சபாபதிசர்மா, நீர்வேலி அரசகேசரிப்பிள்ளையார் கோவில் பிரதம குருக்கள் சாம்பசத சிவக்குருக்
களின் பிள்ளைகளான சோமதேவக் குருக்கள் ஜேர்மனியில் வாழும் பாலசந்திரசர்மா ஆகியவர்களும் சமஸ்கிருத கல்விவளர்ச்சிக்கு உரமூட்டி வருவது பெருமைக்குரியதே.
இக்கல்வி அருகிப் போகாது வளர்க்க பிரம்மண குலத்தவர்கள் மட்டுமன்றி மற்றவர்களும் ஊக்கமுடன் செயற்படவேண்டும் மெனக் கேட்டுக் கொள்ளகின்றோம்.