நீர்வேலி ஸ்ரீ கணேசா முன்பள்ளி சிறார்களின் குடிநீர் தேவையைப் பூர்த்தி செய்யும் நோக்குடன் நீர்வேலி நலன்புரிச் சங்கம் லண்டன் அமைப்பினர் ரூபா 36750 செலவில் 45 அடி ஆழமுள்ள குழாய்க்கிணறு ஒன்றினை அமைத்துக் கொடுத்துள்ளனர். முன்பள்ளி நிர்வாகத்தினரின் கோரிக்கையை ஏற்று இப் புனித பணியினை நிறைவேற்ற உதவிய நீர்வேலி நலன்புரிச் சங்கம் லண்டன் அமைப்பின் தலைவர் திரு.மா. திருவாசகம், செயலாளர் திரு. செ. செல்வநாதன், பொருளாளர் திரு. செ. சுபேஸ்குமார் மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் அனைவருக்கும் முன்பள்ளி சமூகத்தினர் தமது நன்றிகளை தெரிவித்துக் கொள்கின்றனர். குழாய்க்கிணறு அமைக்கப்பட்ட போது எடுக்கப்பட்ட சில பதிவுகள்


















