கலாசார அலுவல்கள் அமைச்சினால் வழங்கப்படும் கலாபூஷணம் விருது வழங்கும் விழா கடந்த 29.01.2019 செவ்வாய்க்கிழமை கொழும்பு தாமரைத் தடாகத்தில் ஜனாதிபதி தலைமையில் நடைபெற்றது.
.
கோப்பாய் பிரதேச செயலர் பிரிவில் நீர்வேலி தெற்கைச் சேர்ந்த நடராசா சிவசுப்பிரமணியம் (செட்டியார் – திருமுருகன் திருமண மண்டப உரிமையாளர்) 2018 ஆம் ஆண்டிற்கான கலாபூஷணம் விருதைப் பெற்றார். விருது பெற்ற ந.சிவசுப்பிரமணியம் கைப்பணிப் பொருட்கள் தயாரிப்பதில் நிபுணத்துவம் பெற்றிருக்கின்றார். கோவிலுக்குரிய மற்றும் வீடுகளுக்குரிய அலங்காரப் பொருட்களை தயாரிப்பதைப் பொழுது போக்காகக் கொண்டிருக்கின்றார்.
.
கலாபூஷணம் விருது 60 வயதுக்கு மேற்பட்ட கலைஞர்களுக்கு வழங்கப்படுகின்றது. 14 துறைகளில் இருந்து கலைஞர்கள் தெரிவு செய்யப்படுவர். இவ்வாண்டு நாடு முழுவதிலும் இருந்து 200 பேருக்கு இவ்விருது வழங்கப்பட்டது. இதில் 20 பேர் தமிழர். 10 பேர் முஸ்லிம்கள். இவ்வாண்டு விருதாக விருதுக்குரிய சான்றிதழ், கேடயம் மற்றும் ரூபா இருபத்தையாயிரம் பணப்பரிசு என்பன வழங்கப்பட்டன.
