






புனரமைக்கப்பட்டாமல் இருந்த நீர்வேலி குறுக்கு வீதி (Neervely Cross Road) இன் புனரமைப்பு பணிகள் இன்று (18) ஆம் திகதி ஆரம்பித்துள்ளது.
கடந்த ஆட்சியில் செயற்படுத்தப்பட்ட ஐ றோட் திட்டத்தில் இந்த வீதி புனரமைக்கப்பட இணைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் இவ் வீதியானது நீர்வேலி சந்தியில் இருந்து அச்செழு மூன்று சந்தி இணையும் 4.33 கி.மீற்றர் வீதி காப்பெற் வீதியாக புனரமைக்கப்படவுள்ளது.
இதனை china state engineering corporation இனால் புனரமைப்பு வேலைகள் இன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இந்த வீதியின் புனரமைப்பு வேலைகள் ஆரம்பிக்கப்பட்டமையடுத்து மக்கள் மகிழ்ச்சி வெளியிட்டுள்ளனர்.