நீர்வேலி கந்தசுவாமி ஆலயத்தில் இடம்பெற்ற இறுவட்டு வெளியீடு விழா

நீர்வேலி கந்தசுவாமி ஆலயத்தில் “நீர்வைக் கந்தனின்’ பெருமையை நினைவு கூர்ந்து பண்டிதர் நீ.சி.முருகேசு அவர்களினால் இயற்றப்பட்ட பாடல்களின் இறுவட்டு வெளியீடு விழா இன்று திங்கட்கிழமை ஆலய மண்டபத்தில் 7 மணிக்கு ஆரம்பமாகி இடம்பெற்றது. ஆலய பரிபாலனசபை தலைவர் திரு.த.சோதிலிங்கம் தலைமையில் ஆரம்பமாகிய நிகழ்வில் ஆசியுரை, தலைமையுரை, வாழ்த்துரைகள், வெளியீட்டுரைகள் இடம்பெற்றதை தொடர்ந்து இறுவட்டு வெளியீடு இடம்பெற்றது இதில் முதல் பிரதியை பிரம்மஸ்ரீ இராசேந்திர சுவாமி நாதக் குருக்கள் வழங்கிவைக்க கலாநிதி திரு ஆறு.திருமுருகன் முதல் பிரதியை பெற்றுக்கொண்டார். சிறப்பு பிரதியினை பேபி.சரோஜா கனகசபேசன் பெற்றுக்கொண்டார். பின்னர் இறுவட்டு இசையாளர்கள் கௌரவிப்பும் இடம்பெற்றது. இசையமைப்பு மற்றும் ஒலிப்பதிவு ஈழ நல்லூர் உயரிசைக் கலைஞன் மெல்லிசை ஞானி திரு, கு.அற்புதன் அவர்களுக்கும், இசை ஒருங்கிணைப்பு, தெய்வீக இசைஞானி ந.பரந்தாமன் அவர்களுக்கும், மிருதங்க கலைகள் பைஞான வித்தகர், மிருதங்க நாதமணி திரு ப.லோகேந்திரன் அவர்களுக்கும், பக்தி பாமாலை பாடியவர் கலைமாமணி,இசை ஏந்தல் சங்கீதரத்தினம் திரு. சி.பிரதீபன் அவர்களுக்கும் கௌரவிப்பு இடம்பெற்றது. இந்நிகழ்வில் பலரும் வருகை தந்து நிகழ்வினை சிறப்பித்தனர். அத்துடன் முழுமையான ஊடக அனுசரணை Capital FM & Capital TV வழங்கி இருந்தமையும் குறிப்பிடத்தக்கது. Thanks : Mr. R. Thayaparan & Mr.S. Nirujan

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *