நீர்வேலி அத்தியார் இந்துக் கல்லூரியின் விசேட கல்விப்பிரிவிற்கான அன்பளிப்பு பொருட்களான தொலைகாட்சிப் பெட்டி, DVD player என்பன 2007 ஆம் ஆண்டு உயர்தர மாணவர்களால் 29.03.2019 அன்று பாடசாலைக்கு அன்பளிப்புச் செய்யப்பட்டது. இவ் அன்பளிப்பு பொருட்களை பாடசாலையின் முன்னாள் அதிபரும் முன்னாள் பிரதிக் கல்விப் பணிப்பாளர் திரு.இ. குணநாதன் அவர்களும் பாடசாலையின் ஓய்வு பெற்ற ஆசிரியை திருமதி. இராஜமனோகரி அருந்தவனதான் அவர்களும் இணைந்து பாடசாலை அதிபர் திரு. கு. ரவிச்சந்திரன் அவர்களிடமும் தொகுதிக்குரிய ஆசிரியரிடமும் கையளித்தனர்.






