மூத்த ஆங்கில ஆசிரியர் த.ந. பஞ்சாட்சரம் எழுதிய சிவதொண்டன் தவத்திரு செல்லத்துரை சுவாமிகள் என்ற நூலின் வெளியீட்டு விழா ஞாயிற்றுக்கிழமை 16.12.2018 பிற்பகல் 3 மணிக்கு நீர்வேலி அரசகேசரிப் பிள்ளையார் ஆலயத்தில் நடைபெற்றது.
.
ஆலய பரிபாலன சபைத் தலைவர் க. கிருபாகரன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் யாழ். சிவதொண்டன் நிலைய அடியவர் வி. முரளிதரன் சுவாமிகள் மங்கலவிளக்கேற்றினார்
.
நீர்வைக் குருமார் சார்பில் பிரம்மஸ்ரீ நீர்வைமணி கு. தியாகராஜக் குருக்கள், தியாக. மயூரகிரிக் குருக்கள் ஆகியோர்ஆசியுரைகளை வழங்கினர். ஆசிரியர் சீ.கமலதாஸ் வரவேற்புரையையும் ஆலய பரிபாலன சபைப் பொருளாளர் ச.க. முருகையா நூல் வெளியீட்டுரையையும் பண்டிதர் கலாநிதி செ.திருநாவுக்கரசு நூல் ஆய்வுரையையும் வழங்கினர்
.
நிகழ்வில் சிறப்புரைகளை கலாநிதி ஆறு.திருமுருகன், ஆசிரிய கலாசாலை பிரதி அதிபர் ச.லலீசன், ஓய்வுநிலை பிரதிக் கல்விப் பணிப்பாளர் இ.குணநாதன், கிராம அலுவலர் சு.சண்முகவடிவேல், சமாதான நீதிவான் த.பரராசசிங்கம் ஆகியோர் ஆற்றினர்.
நூலினை கலாநிதி செ.திருநாவுக்கரசு, கலாநிதி ஆறு.திருமுருகன் ஆகியோர் இணைந்து வெளியிட்டு வைக்க .அதன் முதற்பிரதியை இருதய சத்திரசிகிச்சை வைத்திய நிபுணரும் நூலாசிரியரின் மாணவருமாகிய சி.முகுந்தன் பெற்றுக்கொண்டார்.
.
ஆசிரியர் த.ந.பஞ்சாட்சரம் அவர்கள் சிவதொண்டன் நிலையத்தின் அடியவர் என்பதுவும் தனது 89 ஆவது வயதில் இந்நூலை வெளியிட்டு வைத்துள்ளார் என்பதுவும் இங்கு குறிப்பிடத்தக்கன.
.
யாழ்ப்பாணம், பருத்தித்துறை முதலிய இடங்களில் இருந்து ஆசிரியரின் மாணவர்கள் ஊடகங்கள் வாயிலான செய்தியை அறிந்து வருகை தந்ததுடன் நூலாசிரியரின் பாதங்களில் வீழ்ந்து வணங்கி ஆசியை பெற்றுக்கொண்டனர்.