நீர்வேலி தெற்கு ஜே/ 268 பிரிவின் புதிய கிராம சேவையாளராக திரு.க.உபேந்திரன் அவர்கள் நியமிக்கப்பட்டுள்ளார்.
இது வரைகாலமும் கிராமசேவையாளராக திரு.சி.தயாபரன் அவர்கள் நீ்ண்ட காலமாக சேவைபுரிந்துள்ளார். அவர் கல்வியங்காடு கிராம சேவையாளர் பிரிவிற்கு இடம்மாற்றம் அடைந்து செல்கிறார். திரு.சி.தயாபரன் அவர்கள் நீர்வேலி தெற்கு மக்களுடன் மிகவும் நிதானமாகவும் நட்புடனும் தனது சேவைகளைச் செய்திருந்தார்.
நீர்வேலி வடக்கு ஜே/269 கிராம சேவையாளர் பிரிவிற்கு புதிதாக நியமிக்கப்பட்ட கிராம அலுவலர் செல்வி. பிரேமசியா பாஸ்கரன் அவர்கள் சென்ற வருட ஐப்பசி மாதத்தில் இருந்து சிறப்பாக கடமையாற்றி வருகின்றார்.
நீர்வேலி மேற்கு ஜே/270 கிராம அலுவலர் பிரிவில் திரு. சு. சண்முகவடிவேல் அவர்கள் தொடர்ந்தும் கடமையாற்றி வருகிறார்.
திரு.சி. தயாபரன் அவர்களுக்கு எமது நன்றிகளையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்வதோடு புதிய கிராமசேவையாளர்கள் திரு.க.உபேந்திரன் மற்றும் செல்வி. பா. பிரேமசியா அவர்களை வரவேற்கின்றோம். உங்களது சேவை எமது ஊரிற்கு சிறப்பாக அமைய வாழ்த்துகின்றோம்.

