கிராமிய கல்வி அபிவிருத்தி நிறுவனத்தின் கற்றல் உபகரணங்கள் வழங்கல் (REDI – Rural Education Development Institution )

கிராமிய கல்வி அபிவிருத்தி நிறுவனத்தின் அனுசரணையுடன் நீர்வேலி அணியத்தினுள்ள சுவிஸ் நற்பணிச் சங்க புலமைப்பரிசில் பெரும் ஒன்பது பாடசாலைகளை சேர்ந்த 70 மாணவர்களுக்கு தலா 2000 ரூபா பெறுமதியான ஒரு இலட்ச்சத்து நாற்பது ஆயிரம் ரூபாவுக்கு (140000) கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டன.

இதில் நீர்வேலி கரந்தன் இராமுப்பிள்ளை வித்தியாலயத்தில் 11 மாணவர்களுக்கு 08.01.2019 செவ்வாய்க்கிழமை அதிபர் திருமதி சாந்தினி வாகீசன் அவர்களின் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் நிறுவன தலைவர் திரு.இ. குணநாதன் (ஓய்வு பெற்ற பிரதிக் கல்விப் பணிப்பாளர்) அவர்களால் கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கப்படடன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *