பரலோகமாதா

20160421_114200_Richtone(HDR)

விடாமுயற்சியைத் தனது குறிக்கோளாகக் கொண்ட அருட்பணி கென்றியூலன் அவர்களின் அயரா முயற்சியால் 1904ஆம் ஆண்டு ஜனவரி 23ஆந் திகதி (23.1.1904)
நீர்வேலியில் பரலோகமாதா அன்னைக்கு கல்லினால் ஆலயம் அமைக்க அடிக்கல் நாட்டப்பட்டு அத்திவாரமிடப்பட்டது. 1904 ஆம் ஆண்டு அருட்பணி கிப்போலிற் அடிகளாரின் இடமாற்றத்தையடுத்து, இந்நிலையம் நல்லூர் அருட்பணி பன்மொழிப்
புலவர் சுவாமி ஞானப்பிரகாசர் அவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

சுவாமி ஞானப்பிரகாசர் அவர்கள் பாழ்கிணற்றில் வீசப்பட்ட  அன்னையின் திருச்சொரூபத்தை எவ்வித அழிவுமின்றி எடுத்து, சிம்மாசனத்தில் வைத்து திருப்பலி பூசைகள்செய்து வந்தார். செங்கோல் மாதா சொரூபமாக காட்சிதரும் இவ்வன்னை “பரலோகமாதா” எனவும் விண்ணகம் எழும் தோற்ற அமைப்புடன் இருப்பதால் “விண்ணக அரசி” எனவும் அழைக்கப்பட்டு வணங்கி வருகின்றார்கள். உதய தாரகை
போன்று புத்தெழிலுடன் புனிதத்துவமாக அன்னை இன்றும் காட்சி தருகின்றாள்.

சுவாமி ஞானப்பிரகாசரினால் அமைக்கப்பட்ட சுமார் 80 ஆலயங்களில் முதன்மையானது என்னும் பெருமைக்குரியது இவ்வாலயம். இவ்வாலய நிர்வாகம் இப்பொழுது உரும்பிராய்ப் பங்கின் கீழ் நிர்வகிக்கப்பட்டு வருகின்றது. அருட்பணி
யூட்நிக்சன் அவர்கள் பங்குத்தந்தையாக திருப்பலிப் பூசைகள் நடாத்தியும். திருச்செபமாலை செபித்தும் வழிநடத்தி வருவது பெருமைக்குரியதே.
இவ்வாலயத்தில் தினசரி காலை 5 மணிக்கு திருந்தாதி மணி அடித்து வழிபாடுகள் நடைபெறுவதோடு, வராந்தம் செவ்வாய், சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் காலைநேர
திருப்பலிப் பூசையும், மே மாதத்தில் மாலைநேரத் திருச்செபமாலையும் நடைபெறுவதோடு, வருடாந்தம் ஆவணி 15ஆந் திகதிக்குப் பின்வரும் ஞாயிற்றுக்கிழமையை அந்தமாக வைத்து தொடர்ந்து 10 தினங்கள் விசேட திருப்பலி பூசைகள் நடைபெற்று திருச்சொரூப பவனி வருவார். நாலாபக்கங்களிலுமிருந்து மக்கள் ஒன்றுகூடி நேர்த்திக்கடன்களை நிறைவேற்றுவார்கள். விசேட திருப்பலி பூசைக்காலங்களில் கிராமமேஅழகுக்கோலமாக் காட்சிதரும் அழகே தனிச்சிறப்பிற்குரியது.
மாதா வீதி உலா வரும் நிகழ்வு வெகுசிறப்பாக நடைபெற்றுவருவது பெருமைக்குரியதே. இத் திருவிழாக் காலங்களில் சமயப்பிரசங்கங்களும். கலைநிகழ்ச்சிகளும், நாட்டுக்கூத்துநிகழ்ச்சிகளும் நடைபெற்று மக்கள் அன்னையைத் தரிசிக்கும்சிறப்பு மகிழ்ச்சிக்குரியதே.
கிறிஸ்மஸ் பண்டிகையை முன்னிட்டு விசேட திருப்பலிப் பூசை வழிபாடுகள், சமயப்பிரசங்கங்கள், கலைநிகழ்ச்சிகள் நடைபெறுவதோடு, ஒளிவிழாவும் சிறப்பாகக்
கொண்டாடப்பட்டு வருகின்றமை சிறப்பிற்குரியதே.நத்தார் பண்டிகையை முன்னிட்டு ‚நத்தார்ப் பாப்பா‛வீடுகள், கடைகள் என்று பல்வேறு இடங்களுக்கும் சென்று தமது பண்டிகையைச் சிறப்பாகக் கொண்டாடுவது ‚கத்தோலிக்கமதச் சிறப்பை‛ பிரதிபலிப்பதாக அமைந்துள்ளது.

இவ்வாலயப் பங்கு மக்களாக விருந்து, ஆலய வளர்ச்சிக்குத் தொண்
டாற்றிய ஆறுமுகம் யோசவ், இராசேஸ்வர தம்பதிகளின் மகனாகப் பிறந்த
பிரான்சிஸ் (டெலாஸ்) என்பவர் 15.12.1994
இல் மேன்மைதங்கிய ஆயர் தொமஸ்
சவுந்தரநாயகம் அவர்களால் யாழ். புனித
மரியன்னை பேராலயத்தில் குருவாகத்
திருநிலைப்படுத்தப்பட்டார்.

பிரான்சிஸ் (டெலாஸ்)
பிரான்சிஸ் (டெலாஸ்)

நீர்வையூர் மைந்தன்‛ என்னும் பெருமையோடு
விளங்கும் அருட்பணி பிரான்சிஸ் அவர்கள் தனது முதல்
திருப்பலிப் பூசையை நீர்வேலி விண்ணக அரசி ஆலயத்தில்
அன்றைய காலத்தில் பங்குத்தந்தையாக இருந்த அருட்தந்தை
அன்ரனிதாஸ் அடிகளாரின் தலைமையின்கீழ் இந்நிகழ்ச்சியை
நிறைவேற்றியமை பெருமைக்குரிய விடயமாகும். கத்தோலிக்க வளர்ச்சியின் மைல்கல்லாக அமைந்துள்ளமை சிறப்பிற்குரியதாகும்.
இப்படியாக கிராமத்தில் கத்தோலிக்க மதகுரு ஒருவர் உதயமானது கிராமத்தின் புகழில் இடம்பெற வேண்டிய ஓர் அம்சமாகும்.

லூர்த்து அன்னையின் கெபி
மேற்குறிப்பிட்ட பரலோக மாதா (விண்ணக அரசி) தேவாலயத்தின் தென்கிழக்கு மூலையில் லூர்த்து அன்னைக்கு கெபி அமைக்கப்பட்டு பூசை வழிபாடுகள் நடைபெற்று வருகின்றன. இவ்வாலய பங்கு மகனாகவிருந்து ஆலய வளர்ச்சிக்கு
அருந்தொண்டாற்றியதோடு, மதவளர்ச்சிக்காகவும் அயராது உழைத்து தனது 79ஆவது வயதில் 1997ஆம் ஆண்டு இறைவனடி சேர்ந்த வலத்தீன் ஞானம் என்பவரின் நினைவாக அவரது மகன் ஞானம் ரூபன் என்பவரின் உதவியுடன் அமைக்கப்பட்டதே இக்கெபி என்பது குறிப்பிடத்தக்கது.20160421_114120_Richtone(HDR)மலைபோன்ற அமைப்புக் கொண்ட இக்கெபி மிகுந்தலையில் இருந்து கொண்டுவரப்பட்ட கருங்கல்லினால் அமைக்கப்பட்டுள்ளது. மலையின் நடுவே குடைந்து பரிஸ் நகரில் இருந்து கொண்டுவரப்பட்ட ‚லூர்த்து அன்னையின் திருச்சொரூபத்தை சிம்மாசனத்தில் இருத்தி‛ பூசை வழிபாடுகள் செய்து வருகின்
றனர். 22.08.2003இல் அத்திவாரமிடப்பட்ட இக்கெபியின் கட்டிட வேலைகள் எல்லாம் பூரணமாக முடிக்கப்பட்டு| ஏற்றவகையில் வர்ணம் தீட்டி மின்விளக்குகள் பொருத்தி 14.02.2004இல் அருட்தந்தை ஜே. அன்ரனிபாலா அடிகாரின் தலைமையில் அருட்
பணி றெஜி இராசேஸ்வரன் அவர்களால் திறந்து வைக்கப்பட்டது. குறுகிய காலத்தில இக்கெபியின் வேலை களைச்சிறப்பாக நிறைவேற்றிய கட்டடிக்கலைஞர்கள், வர்ணக் கலைஞர்கள், நிதி அன்பளிப்புச் செய்த ஞானம் ரூபன் போன்றவர்களுக்கு லூரத்து அன்னையின் அருட்கடாட்சம் என்றும் கிடைக்கப் பிரார்த்திப்போமாக.

இப்பங்குகள் புலம்பெயர்ந்த நிலையிலும் தங்களை வாழ வைக்கும் அன்னையின் அருட்பணிகளை விசுவாசத்துடன் சிறப்பாகச் செய்து வருவது சிறப்பிற்குரியதே.