இராச வீதி மனோன்மணி அம்மன்

நீர்வேலி வடக்கில் மாசுவன் சந்தியிலிருந்து வடக்கு நோக்கிச் செல்லும் இராசபாதை வீதியின் ஓரமாக சந்தியிலிருந்து 150 யார் தூரத்தில் அமைந்துள்ளது இவ்வாலயம்.
தனியொருவரான பொன்னுத்துரை கைம்பெண் மனோன்மணி என்பவரால் அவரது காணியில் வைத்து வழிபடும் இவ்வாலயம் 1989ஆம் ஆண்டளவில் ஆரம்பிக்கப்
பட்டது. இவ்வாலயம் கிராமத்தில் வடக்கெல்லையில் காவல் தெய்வம் போல் அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
14.07.1999 புதன்கிழமை கும்பாபிஷேகம் செய்யப்பட்டமையும் குறிப்பிடத்தக்கதாகும். அம்பிகையின் அருள் அனைவர்க்கும்
கிடைக்கப் பிரார்த்திப்போமாக.