அத்தியார் இந்துக் கல்லூரியில் சிறப்பாக நடைபெற்ற சிரமதானம்

நீர்வேலி அத்தியார் இந்துக் கல்லூரியில் சிரமதானம் இன்று 16.09.2018 ஞாயிற்றுக் கிழமை காலை 8.00 மணியிலிருந்து கல்லூரி மைதானத்தில் இடம்பெற்றது. இந் நிகழ்வுக்கு திரு. மாணிக்கவாசகர் திருவாசகம் (தலைவர் – நீர்வேலி அத்தியார் இந்துக் கல்லூரி பழைய மாணவர் சங்கம் – UK, தலைவர் – நீர்வேலி நலன்புரிச் சங்கம் – UK) அவர்கள் அனுசரணை வழங்கினார். இந் நிகழ்வை திரு.இ. செல்வராசா (பழைய மாணவர், பிரதேச சபை உறுப்பினர் – வலிகாமம் கிழக்கு) அவர்கள் முன்னின்று வழிநடாத்தினார். மேற்படி நிகழ்வில் அதிபர், ஆசிரியர்கள், மாணவர்கள், பழைய மாணவர்கள், நலன் விரும்பிகள் மற்றும் நீர்வேலி நலன்புரிச் சங்கம் – UK நீர்வேலிக் கிளை உறுப்பினர்கள் பலரும் கலந்து கொண்டனர். சிரமதானத்தில் பங்குபற்றியோருக்கு சிற்றுண்டிகள் வழங்கப்படடன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *